67 வர்த்தக வாகனங்கள் மற்றும் HS குறியீடுகளுக்கு உட்பட்ட 299 பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகள் அடுத்த வாரம் தளர்த்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (04) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்த அவர், தனியார் வாகனங்கள் தொடர்பான 304 HS குறியீடுகளின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த அரசாங்கம் இன்னும் தீர்மானிக்கவில்லை என தெரிவித்தார்.