போதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்யும் ஒவ்வொரு பொலிஸ் அதிகாரிக்கும் 5,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் முன்னோடி திட்டத்தை செயல்படுத்த போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவு தீர்மானித்துள்ளது.
இந்த திட்டம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில், போதையில் வாகனம் ஓட்டும் ஒருவரை கைது செய்யும் பொலிஸ் அதிகாரிக்கு அவரது சம்பளத்தில் ரூ. 5000 கூடுதல் கொடுப்பனவாகவும் மேலும் கைது செய்பவர்களுக்கு அதிகபட்சமாக ஐந்தாயிரம் ரூபாய் ரொக்கப்பரிசும் வழங்கப்படும் என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகளை ஊக்குவிக்கவும், விபத்துகளைத் தடுக்கவும் இந்த முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டதாக மேலும் தெரிவித்தனர்.
No comments