Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

பொலிஸ் திணைக்களத்திற்கு சீன நன்கொடைகள்


சீன மக்கள் குடியரசினால் இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு 26 ரனொமொடோ (RANOMOTO) வகை மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 100 LENOVO டெஸ்க்டொப் கணனிகள் ஆகியவற்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க ஆகியோரின் ஒருங்கிணைப்புடன், பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ ஷென் ஹொங்விடம் (Qi Zhenhong) விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பணிகளை இலகுவாக்க இந்த நன்கொடையை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஆவணங்கள், இலங்கைக்கான சீன தூதுவர் சீ ஷென் ஹொங்வினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டதுடன், சீன தூதரக அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழு மற்றும் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (நிர்வாகம்) நிலந்த ஜயவர்தன உட்பட பொலிஸ் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments