திருகோணமலை கோட்டையானது ஃப்ரெட்ரிக் கோட்டை சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக திறந்து விடப்பட்டுள்ளதை அடுத்து அதிகளவான சுற்றலா பயணிகள் கோட்டையை பார்வையிட்டு வருகின்றனர்.
இது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையில் உள்ள ஒரு இடைக்கால கோட்டையாகும். கிபி 1624 இல் போர்த்துகீசியர்களால் கட்டப்பட்டது,
இது ஆரம்பத்தில் ட்ரிக்விலிமேல் கோட்டை என்று அழைக்கப்பட்டது. புகழ்பெற்ற பழமையான இந்து கோணேஸ்வரம் கோவிலின் இடிபாடுகளைப் பயன்படுத்தி இந்த கோட்டை கட்டப்பட்டது.
1665 ஆம் ஆண்டில், டச்சுக்காரர்கள் ட்ரிக்வில்லிமேல் கோட்டையை இடித்த பிறகு, ஃபிரெட்ரிக் கோட்டை என்று பெயர் மாற்றினர்.
பின்னர் 1782 இல், ஆங்கிலேயர்கள் திருகோணமலையை டச்சுக்காரர்களிடமிருந்து கைப்பற்றி கிழக்கு மாகாணத்தின் நிர்வாக மையமான திருகோணமலை கோட்டையை நிறுவினர்.
ஆங்கிலேயர்கள் கோட்டையில் பல மாற்றங்களைச் செய்தனர்,
இந்த கோட்டை பின்னாட்களில் இலங்கை கடற்படையினரின் வசம் இருந்து வந்தது. கோட்டை பகுதி உயர்பாதுகாப்பு வலயமாகவும் காணப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மக்கள் பார்வைக்காக விடப்பட்டுள்ளது.
"கோட்டைக்குள் அமைந்துள்ள பௌத்த விகாரை, இந்து கோவில் மற்றும் இராணுவ முகாம் ஆகியவற்றின் பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் விசேட ஏற்பாடுகளுடன் பிரடெரிக் கோட்டை சுற்றுலாப் பயணிகளுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.கோட்டை மற்றும் அதற்கு வெளியில் உள்ள நினைவுச்சின்னங்களை பாதுகாப்பான முறையில் பாதுகாப்பதுடன், அகழ்வு செய்யப்படவுள்ள பகுதிகள் பாதுகாக்கப்பட்டு துரிதமாக முடிக்கப்பட வேண்டும்" என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க விசேட பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments