நுவரெலியாவிற்கு அடையாள சின்னமாக கடந்த 130 வருடங்களுக்கு மேலாக திகழும் நுவரெலியா தபால் நிலையத்தினை விற்பதற்கு எதிராக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிலர் செவ்வாய்க்கிழமை (07) தபால் நிலையத்திற்கு முன்பாக கைகளில் பதாகைகளை தாங்கியவாறு தமது எதிர்ப்பினை வெளிக்காட்டினர்.
அதேவேளை நுவரெலியாவின் பழமையான தபால் நிலையத்தை இந்தியாவின் தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு கைமாற்றுவதற்கு அராசாங்கம் தீர்மானம் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவே இன்று நள்ளிரவு முதல் தபால் ஊழியர்களால் 48 மணிநேர பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது
No comments