கந்த சஷ்டி விரதம் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலும் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெறவுள்ளன.
காலை 09 மணிக்கு சிவலிங்க பூஜையும் 10 மணிக்கு காலசந்தி பூஜையும் , 10.15 மணிக்கு வசந்தமண்டப பூஜையும் நடைபெறவுள்ளது. சாயரட்சை பூஜை மாலை 3.45 மணிக்கும் , 2ஆம் காலசந்தி பூஜை 4 மணிக்கும் தொடர்ந்து 4.15 மணிக்கு வசந்தமண்டப பூஜையும் இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் 18ஆம் திகதி சனிக்கிழமை மாலை சூரசம்ஹார உற்சவமும் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை திருக்கல்யாண உற்சவமும் நடைபெறவுள்ளது.
No comments