கொழும்பில் நடைபெற்ற சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்கத்தின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் யாழ்.நோக்கி வந்த பேருந்து உள்ளிட்ட மூன்று பேருந்துகள் மீது அநுராதபுர பகுதியில் கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அநுராதபுரம் - நொச்சியாகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட , அநுராதபுரம் - புத்தளம் வீதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு குறித்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்துகள் இரண்டு மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து என்பவற்றின் மீது மோட்டார் சைக்கிள்களில் வந்த இனம் தெரியாத நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
தாக்குதலில் பேருந்துக்களின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன.
சம்பவம் தொடர்பில் பேருந்துக்களின் சாரதிகளால் நொச்சியாகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
No comments