Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழில் இளம் தாய் உயிரிழப்பு - நிமோனியாவால் நுரையீரல் பாதிக்கப்பட்டமையே உயிரிழப்புக்கு காரணம்


அம்மை நோய் தீவிரமானதால் நிமோனியா ஏற்பட்டு , அதனால் நுரையீரல் பாதிக்கப்பட்டமையாலையே இரட்டை குழந்தையை பிரசவித்த இளம் தாய் உயிரிழந்தார் என உடற்கூற்று பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

 யாழ்ப்பாணம் தொண்டமானாறு - வல்லை வீதியை சேர்ந்த நி.விதுசா (வயது 25) என்ற இளம் தாய் நேற்று முன்தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். 

குறித்த பெண் கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரட்டை குழந்தையை பிரசவித்துள்ளார். குழந்தையை சத்திர சிகிச்சை (சிசேரியன்) மூலமே பிரசவித்தார் என தெரிவிக்கப்படுகிறது.

தாயும் குழந்தைகளும் வீடு திரும்பிய நிலையில் தாய்க்கு திடீரென சுகவீனம் ஏற்பட்டு நெல்லியடியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

அங்கிருந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உடற்கூற்று பரிசோதனையில் உயிரிழந்த பெண்ணுக்கு அம்மை வருத்தம் தீவிரமாகி நிமோனியா ஏற்பட்டு நுரையீரலை பாதித்ததால் உயிரிழப்பு ஏற்பட்டதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

அதேவேளை உடலின் சில பாகங்கள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

No comments