வடமாகாண இளையோருடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் பத்தாம் ஆண்டு விழாவை முன்னிட்டும் தீபாவளி தினைத்தினை முன்னிட்டும் கடந்த ஞாயிற்றுக்கிழமை, இளவாலை புனித ஹென்றி அரசர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
பொது தேவைகள் தொடர்பில் முன் வைக்கப்படும் கோரிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கைகளை எடுப்போம். இளையோர்களுடன் இணைந்து பணியாற்றவே விரும்புகிறேன்.
சமூக முன்னேற்றத்திற்கு இளைஞர் சங்கங்களின் பங்களிப்புக்கள் அவசியம். அந்த வகையில் இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என மேலும் தெரிவித்தார்.
No comments