யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் தங்குமிடம் ஒன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் இன்றைய தினம் திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
தென்னிலங்கையை சேர்ந்த லால் பெரேரா (வயது 61) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கடந்த மூன்று நாட்களாக அந்த தங்குமிடத்தில் தங்கி இருந்தார் எனவும் , அந்நிலையில் இன்றைய தினம் காலை உயிரிழந்த நிலையில், சடலமாக காணப்பட்டதை அடுத்து , விடுதி உரிமையாளரால் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் சடலத்தை மீட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்,போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
No comments