சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் ஒன்றிற்கு எதிராக கடந்த 5 வருட காலமாக நடைபெற்ற நீதிமன்ற விசாரணைகளின் அடிப்படையில், நேற்றைய தினம் புதன்கிழமை உணவகம் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கியமையை உறுதி செய்த மன்று உரிமையாளருக்கு 25 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது.
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் இயங்கி வரும் சைவ உணவகம் ஒன்று சுகாதார சீர்கேட்டுடன் இயங்கியதாக கடந்த 2018ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றில் பொது சுகாதார பரிசோதகரால் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது உரிமையாளர் தம் மீதான குற்றச்சாட்டை ஏற்க மறுத்ததை அடுத்து, மன்றில் வழக்கு விசாரணைகள் தொடர்ந்தன.
கடந்த 5 வருட காலமாக நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது , உணவகம் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கியமையை மன்று உறுதி செய்ததை அடுத்து உணவாக உரிமையாளருக்கு 25 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து தீர்ப்பளித்தது.
No comments