Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பருத்தித்துறையில் வாள் வெட்டு - இளைஞன் படுகாயம்


யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 

பருத்தித்துறை , கந்தவுடையார் வீதியை சேர்ந்த ஜெயசந்திரன் டிலக்சன் (வயது 23) என்பவரே காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குறித்த இளைஞன் வீதியில் சென்று கொண்டிருந்த வேளை அவரை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்த இருவர் , இளைஞனை வழிமறித்து வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  

No comments