Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழ். சிறையில் பெண் கைதிக்கு துன்புறுத்தல்


யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பெண் கைதியொருவர் துன்புறுத்தலுக்கு உள்ளாகி வருவதாக , பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். 

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் கைதியை நேற்றைய தினம் வியாழக்கிழமை பார்வையிட சென்ற போது , சிறைக்காவலர்கள் தன்னை துன்புறுத்துவதாக தம்மிடம் முறையிட்டு அழுததாக உறவினர்கள் மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளனர். 

அது தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. 

No comments