Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழில். அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையாளர்களால் எயிட்ஸ் நோயாளிகள் அதிகரிக்கும் அபாயம்


யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள போதைவஸ்து பாவனையால் , எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து இருக்கலாம் என  வடபிராந்திய பாலியல் நோய் தடுப்பு சிகிச்சை நிலைய வைத்திய நிபுணர் வைத்தியர் ஏ. றொகான் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

யாழ்ப்பாணத்தில் தற்போது பெருமளவான போதைப்பொருள் பாவனையாளர்கள் இரத்த நாளங்களின் ஊடாக உடலில் போதைப்பொருளை ஏற்றிக்கொள்கின்றார்கள். அதனால் எயிட்ஸ் போன்ற தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. 

சாதாரண ஒரு ஸ்ரிஞ் மூலம் ஒரு ஊசியை பலர் பாவிப்பதனால் ஒருவருக்கு எயிட்ஸ் தொற்று இருந்தால், அதனை பாவிக்கும்  மற்றவருக்கும் தொற்றக்கூடிய சாத்திய கூறுகள் அதிகமாக காணப்படுகின்றது  

இலங்கையில் தற்போது 5500 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் அதிலே வடக்கு மாகாணத்தை எடுத்துக் கொண்டால் 90 பேர் இன்று வரைக்கும் எச்ஐவி தொற்று உள்ளவர்கள் என  இனங்காணப்பட்டுள்ளார்கள்

அதில் யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை சுமார் 65 பேர் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்

 ஒவ்வொரு ஆண்டும் எயிட்ஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சராசரியாக கூடிக் கொண்டு போகின்றது 

யாழ்ப்பாணத்தில் கடந்த வருடம் 3 பேர் புதிதாக இனம் காணப்பட்டார்கள். இந்த ஆண்டு நான்கு பேர் அடையாளம் காணப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்குரிய சிகிச்சைகள் யாழ்ப்பாண போதனா வைத்திய சாலையில் வழங்கப்படுகிறது என மேலும் தெரிவித்தார். 

No comments