வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்றைய தினம் சனிக்கிழமை முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை கட்டாருக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
தோஹா மன்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக குறித்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
தோஹா ஃபோரம் என்பது கத்தார் மாநிலத்தால் நிதியுதவி செய்யப்படும் உலகளாவிய மன்றமாகும்.
உலகம் எதிர்கொள்ளும் முக்கியமான சவால்களைப் பற்றி விவாதிக்க ஒரு செயல் திட்டத்தை உருவாக்க தலைவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களை ஒன்றிணைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது வெளிவிவகார அமைச்சர் கட்டார் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது
No comments