Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நடிகர் விஜயகாந்த் காலமானார் - கொரோனா தொற்று உறுதி


தென்னிந்திய பிரபல நடிகர் கப்டன் விஜயகாந்த் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை உயிரிழந்துள்ளார். 

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மூச்சு விட சிரமப்பட்ட நிலையில் சென்னை மணப்பாக்கம் மியாட் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். 

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

அந்நிலையில் வைத்தியசாலை மற்றும் விஜயகாந்தின் இல்லம் அமைந்துள்ள சாலிக்கிராமம் பகுதிகளில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

கேப்டன் விஜயகாந்த் என பரவலாக அறியப்படும் விஜயராஜ் அழகர்சாமி எனும் விஜயகாந்த், இந்திய அரசியல்வாதி மற்றும் திரைப்பட நடிகராவார்.

இவர் 2011-16 காலகட்டத்தில், தமிழக சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக இருந்தார். 

அரசியலில் நுழைவதற்கு முன்பாக, தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக இருந்தார். 

சில தமிழ் திரைப்படங்களை தாமே இயக்கி நடித்துள்ளார்

 விஜயகாந்த். 14 செப்டம்பர் 2005 அன்று மதுரையில் நடைபெற்ற அரசியல் மாநாட்டில் "தேசிய முற்போக்கு திராவிட கழகம்" எனும் தனது புதிய கட்சியை ஆரம்பித்தார்.

 பின்னர் 2011ல் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தமிழக சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றார்.

 தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக இவர் பதவி வகித்த காலத்தில், வெளிநாடுகளில் நட்சத்திர கலைவிழாக்கள் நடத்தி சங்க கடன்களை அடைத்தார்.

No comments