மழை காரணமாக இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் வசித்து வரும் மக்களுக்கு உருத்திர சேனையால் 2 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி - முரசுமோட்டை கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த 56 குடும்பங்களுக்கும் , கண்டாவளை கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த 54 குடும்பங்களுக்கும் மற்றும் யாழ்ப்பாணத்தில் 05 வயோதிப குடும்பங்களுக்குமாக 115 குடும்பங்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொதிகள், உருத்திர சேனையால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
No comments