மலேசியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த மனக்கணித போட்டியில் சம்பியனான யாழ்ப்பாணத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் ருஷாந்க்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
80 இற்கும் மேற்பட்ட நாடுகள் பங்குபற்றிய சர்வதேச மனக் கணிதப் போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வி.ருஷாந் முதல் இடத்தை பிடித்து எம் நாட்டிற்கும் எம் மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இலங்கை சார்பில் கலந்து கொண்டு Champion பெற்ற ஒரே ஒருவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை யாழ்ப்பாணத்தில் இருந்து இருந்த போட்டியில் 24 பேர் கலந்து கொண்ட நிலையில் , UCMAS யாழ்ப்பாண கிளையில் இருந்து பங்கேற்ற ஐந்து பேரில் வி.ருஷாந் தனது பிரிவினருக்கு இடையிலான போட்டியில் சாம்பியனான நிலையில், கிருபாகரன் தர்சானந், செந்தில்நாதன் சேசாளன், கஜேந்திரன் லவின், வானதி சிவநேசன் ஆகிய நால்வரும் தத்தம் பிரிவுக்கான போட்டியில் பங்கேற்று மூன்றாம் இடத்தினை பெற்றுக்கொண்டனர்.
No comments