Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

சேர் பொன் இராமநாதனின் 93வது குரு பூசை


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உருவாவதற்கு  அடித்தளமான பரமேஸ்வராக் கல்லூரியின் நிறுவுநரும், சைவப் பெரு வள்ளலாருமான சேர். பொன். இராமநாதனின் 93ஆவது குருபூசை இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது.

பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலயத்தில் விசேட அபிஷேகம், பூஜையுடன் இந்நிகழ்வுகள் ஆரம்பமாகின. 

அதன் போது, பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள சேர். பொன். இராமநாதனின் உருவச் சிலைக்கும், சபா மண்டபத்தினுள் உள்ள உருவப் படத்துக்கும், மலர்மாலை அணிவித்து, வணக்கம் செலுத்தபட்டது. 








No comments