டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான இளைஞன், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் சாரூரன் (வயது 23) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்
டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான நிலையில் , அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் , மூளை சாவடைந்திருந்தார்.
அந்நிலையில் தொடர்ந்து இளைஞனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் , சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் புதன்கிழமை காலை உயிரிழந்துள்ளார்
அதேவேளை யாழ்.போதனா வைத்தியசாலையில் , நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாத்திரம் 71 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு காரணமாக இரண்டு விடுதிகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளதுடன் , குழந்தை நோயாளர் விடுதி நிரம்பி உள்ளது என வைத்தியசாலை பணிப்பளார் தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை 11 மாத குழந்தை ஒன்று டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்து இருந்ததுடன் , கடந்த சனிக்கிழமை டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு வழங்கப்பட்ட மருந்து ஒவ்வாமை ஏற்பட்டமையால் , மாணவி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments