தற்போதுள்ள நிலைமையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், மீண்டும் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகினால் மாத்திரமே நாட்டினை முன்னோக்கிகொண்டு செல்ல முடியும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாதெரிவித்தார்
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
பலர் ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கலாம் ஆனால் பிரேக் டவுன் ஆன வண்டி போன்று இருந்த நாட்டினை ஓரளவிற்கு ஓடக்கூடிய வண்டியாக தற்போதுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாற்றியுள்ளார்
எனவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகினால் இந்த நாடு முன்னோக்கிச் செல்லும் என தெரிவித்தார்
No comments