வீட்டில் தூசு தட்டியவர் , தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் அராலி வடக்கை சேர்ந்த வடிவேலு பரமகுலதேவராசா (வயது 75) என்பவரே உயிரிழந்துள்ளார்.
தனது வீட்டில் உயரத்தில் ஏறி தூசு தட்டிக்கொண்டிருந்த வேளை , தவறி விழுந்துள்ளார். அதனை அடுத்து அவரை யாழ், போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது , அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.
No comments