கிளிநொச்சி - பூநகரி பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவர் அனைத்து பாடங்களிலும் திறமை சித்தியை பெற்று சாதனை படைத்துள்ளார்.
பூநகரி கிராமத்தில் 1967ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட செல்லியாதீவு அ.த.க பாடலையில் கல்வி கற்று வரும் சதீசன் சரண்யா எனும் மாணவி க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9 பாடங்களுக்கும் A தர சித்தி பெற்று சாதனை படைத்துள்ளார்.
குறித்த மாணவிக்கு பாடசாலை சமூகம் , பழைய மாணவர்கள் , ஊரவர்கள் என பல்வேறு தரப்பினரும் தமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
No comments