Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

வடக்கில் யாழ்ப்பாணத்தில் தான் டெங்கு அதிகம்


வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே அதிகூடிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக, மாகாணத்தின் டெங்கு நிலைமை தொடர்பான மீளாய்வு கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், யாழ் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சளால் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், 2192 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற மீளாய்வு கூட்டத்தின் போதே அவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் மிகக் குறைவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், எனினும் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் காணப்படுவதாகவும் அந்ததந்த மாவட்டங்களின் செயலர்களும், சுகாதார துறைசார் அதிகாரிகளும் சூம் ஊடாக தெரிவித்தனர்.

இந்நிலையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை தொடர்பிலும், டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்துவதில் சுகாதார துறையினர் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பிலும் அதிகாரிகளால் ஆளுநருக்கு விரிவாக எடுத்துக்கூறப்பட்டது.

அதன் போது ஆளுநர்,  டெங்கு நுளம்பு பரவுவதை தடுக்கவும், பொதுமக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கிராமிய மட்டத்தில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமாறு பணித்தார்.

அத்துடன், வடிகான் துப்பரவு ஒழுங்கு முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், கைவிடப்பட்ட மற்றும் பராமரிப்பற்ற காணிகளில் நுளம்பு பெருகுவதை தடுக்க வேண்டும். பராமரிப்பற்ற காணிகள் தொடர்பில், காணி உரிமையாளர்களுக்கு எதிராக விரைவான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆளுநர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.  

No comments