யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக சுமார் 46 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளதாக யாழ்.மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி கைலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் தெரிவிக்கையில்,
வேலணை பிரதேச செயலர் பிரிவில் 07.04 ஏக்கரும், காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 3.325 ஏக்கரும், சங்கானை பிரதேச செயலர் பிரிவில் , 18.75 ஏக்கரும் , பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 17 ஏக்கர் நெல் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை யாழ். மாவட்டத்தில் 9.125 ஏக்கர் மரக்கறி செய்கையும் அழிவடைந்துள்ளது. அதில் அதிக பட்சமாக சங்கானை பிரதேச செயலர் பிரிவில் , 08.875 ஏக்கர் அழிவடைந்துள்ளது.
No comments