Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழில் கஞ்சாவுடன் இருவர் கைது - வாகனமும் பறிமுதல்


யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 07 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்கள் பயணித்த வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது. 

கிளிநொச்சி பகுதியில் இருந்து கேரளா கஞ்சாவை கடத்தி வருவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , சாவகச்சேரி பகுதியில் , பொலிஸாருடன் இராணுவ புலனாய்வாளர்களும் இணைத்து மேற்கொண்ட நடவடிக்கையில் , சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த வாகனத்தை மறித்து சோதனையிட்ட போதே, வாகனத்தில் இருந்து 07 கிலோ கஞ்சாவை மீட்டுள்ளனர். 

அதனை அடுத்து, வாகனத்தில் பயணித்த இருவரையும் கைது செய்த பொலிஸார் , கைது செய்யப்பட்டவர்களையும்  வாகனம் மற்றும் கஞ்சாவையும் பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர். 

No comments