சத்திரசிகிச்சையின் போது ஒட்சிசனுக்குப் பதிலாக கார்பனீராக்சைடு வழங்கப்பட்டதால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார தொழிற் சங்கங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லான, சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
உயிரிழந்த பெண் அண்மையில் மார்பக புற்றுநோய் சத்திரசிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதன்போது அவருக்கு தேவையான ஒட்சிசனுக்குப் பதிலாக கார்பனீராக்சைடு தவறாகக் கொடுக்கப்பட்டதாக சுகாதார தொழிற் சங்கங்கள் கூறுகின்றன.
நுகேகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய பெண் ஒருவரே அறுவை சிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார்.
No comments