எனக்கு ஆதரவும் ஊக்கமும் தந்த அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறன் என பாடகி அசானி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு முதல் தடவையாக வருகை தந்த அசானி , யாழ்.ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே , ஊடகங்களுக்கும் தனக்கு ஆதரவு தந்தவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.
மேலும் தெரிவிக்கையில்.
யாழ்ப்பாணத்திற்கு முதல் தடவையாக வந்துள்ளேன். நல்லூர் ஆலயம் உள்ளிட்ட சில இடங்களுக்கு சென்று இருந்தேன். யாழில் எனக்கு தந்த கௌரவிப்புக்கள் , வரவேற்புகள் பரிசில்கள் என மகிழ்ச்சியை தந்தது.
எனக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் எனது நன்றிகள். பாடகி ஆகி அதன் மூலம் பலருக்கும் உதவ வேண்டும் என்பதே என் ஆசை என தெரிவித்தார்
No comments