யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதிகளில் அண்மை காலமாக மர்ம பொருட்கள் கரையொதுங்கி வருகின்றன.
உடுத்துறை கிழக்கு பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை மர்ம பொருள் ஒன்று கரையொதுங்கி உள்ளது. அதில் Asia - 2 என பொறிக்கப்பட்டுள்ளது. இது ஏதேனும் கப்பலில் இருந்து தவறி விழுந்து கரையொதுங்கிய பொருளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அதேவேளை கடந்த 27ஆம் திகதி உடுத்துறை வேம்படி பகுதியில் பௌத்த கொடிகளுடன் தொப்பம் ஒன்று கரையொதுங்கி இருந்தது.
கடந்த 01ஆம் திகதி இரும்பிலான மர்ம பொருள் ஒன்று நாகர் கோவில் கடற்கரை பகுதியில் கரையொதுங்கி இருந்தது.
No comments