Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

10 ஆயிரம் காணி உறுதிப் பத்திரங்களை வழங்க நடவடிக்கை


மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவிற்கமைய, “உரித்து” வேலைத்திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

குறித்த காணி உறுதிப் பத்திரங்கள் தற்போதும் பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதென சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளர் எச்.எம்.பீ.பீ ஹேரத் தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகள், மாவட்டச் செயலாளர்கள், பிரதேச செயலாளர்களுடன் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை தொழில்நுட்ப முறைமையினூடாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

“உரித்து” வேலைத்திட்டத்தின் கீழ் முதற் கட்டமாக 10 ஆயிரம் காணி உறுதிப் பத்திரங்களை வழங்கி வைப்பதற்கான தேசிய நிகழ்வு ஜனாதிபதி ரணல் விக்ரமசிங்கவின் தலைமையில் எதிர்வரும் 05ஆம் திகதி  ரங்கிரி தம்புளை விளையாட்டரங்களில் நடைபெறவுள்ளது.

“உரித்து” வேலைத்திட்டத்தின் கீழ் 20 இலட்சம் விவசாயக் குடும்பங்களுக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்க அரசாங்கம் திட்டமிட்டிருப்பதோடு, அதற்காக வரவு செலவு திட்டத்திலும் 2 பில்லியன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி காணி கட்டளைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட காணி உறுதிகள் அனைத்தும் முழு உரிமையுள்ள காணிஉறுதிப் பத்திரங்களாக மாற்றப்படும்.

இருப்பினும் அந்தக் காணிகளை விற்பனை செய்தல் அல்லது வேறு தரப்பினருக்கு கைமாற்றுதற்கான உரித்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை என காணி ஆணையாளர் பந்துல ஜெயசிங்ஹ தெரிவித்தார்.

No comments