யுக்திய நடவடிக்கைக்கு சர்வதேச அழுத்தங்கள் இருந்த போதிலும், அது தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் வலியுறுத்தினார்.
நீர்கொழும்பு பிரதேச சமூக பொலிஸ் குழு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.
“சீருடையுடன் இருக்கும் போது யாரேனும் தாக்கினால் திருப்பி அடிக்க வேண்டும், இல்லையேல் சீருடை அணிவதில் பயனில்லை, கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டும், ஜனாதிபதி எனக்கு பலத்தை வழங்கியதால் தான் இதனை கூறுகின்றேன்.
யுக்தியை நடவடிக்கை மூலம், நாட்டை சுத்தம் செய்ய நினைத்தேன். சில யூடியூபர்கள் போதைப்பொருள் மோசடியாளர்களின் பணத்தில் வாழ்கின்றனர். அவர்களை பயன்படுத்தி எம்மை விமர்சிக்கின்றனர்.
யுக்திய நடவடிக்கையை நிறுத்துங்கள் என்று ஐக்கிய நாடுகள் சபையும் கூறியது, எங்கள் நாட்டில், நாங்கள் விரும்பியபடி செயல்படுகிறோம், சர்வதேசத்தின் விருப்பப்படி நான் செயல்படவில்லை."
“பாதாள உலக குழு வழக்குகளில் வாதாடும் சட்டத்தரணிகளும் இருக்கிறார்கள்.பாதாள உலக குழுவினர் மில்லியன் கணக்கில் பணம் ஈட்டுகின்றனர். பாதாள உலக குழுக்களும், போதைப்பொருள் வியாபாரிகளையும் வைத்திருக்க முடியாது. அவர்கள் இந்த நாட்டிற்கு ஒரு சுமை " என்றார்.
No comments