நயினாதீவு நாக பூசனை அம்மன் திருக்குடமுழுக்கிற்காக தங்கத்திலான திருக்குடம் ஆலயத்தில் வைத்து செய்யப்பட்டுள்ளது.
குறித்த தங்க திருக்குட பவனி இன்றைய தினம் சனிக்கிழமை காலை நடைபெற்று , திருக்குடமுழுக்கிற்காக கங்காதரணி தீர்த்தக் கேணியில் இருந்து தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
ஆலய மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 24ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது.
பிரதிஷ்டா கிரியைகள் கடந்த தினம் புதன்கிழமை ஆரம்பமாகி கிரியைகள் இடம்பெற்று வருகின்றன.
நாளை மறுதினம் 22ஆம் திகதி திங்கட்கிழமை காலை 07 மணி முதல் , மறுநாள் செவ்வாய்க்கிழமை மாலை 05 மணி வரை அடியவர்கள் எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வுகள் இடம்பெறும்.
அதனை தொடர்ந்து மறுநாள் 24ஆம் திகதி புதன்கிழமை காலை 09.38 மணி முதல் 11.20 மணி வரையிலான சுப நேரத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெறும்.
No comments