யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் இருந்து போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் , இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர், 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் சிறு தொகை போதைப் பொருட்களுடன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றினை , மோப்ப நாயின் உதவியுடன் , பொலிஸார் சோதனை செய்தனர்.
அதன் போது வீட்டில் இருந்து 500 கிராம் கஞ்சா போதைப்பொருள் , 100 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் , 06 போதை மாத்திரைகள் மற்றும் போதை மருந்தேற்ற பயன்படுத்தும் ஊசிகள் என்பன மீட்கப்பட்டன.
அதனை அடுத்து வீட்டில் இருந்த இளைஞனை பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களையும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இருவரில் ஒருவர் யாழில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் உள்ளிட்ட குற்ற செயல்களுடன் தொடர்புடைய நபர் என விசாரணைகளில் கண்டறிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments