சுகாதார சேவையில் உள்ள வைத்தியர்கள் தவிர்ந்த 72 தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முதல் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில்ஈடுபட்டுள்ளனர்.
இன்றைய தினம் காலை 06.30 மணி முதல் நாளைய தினம் புதன்கிழமை காலை 6.30 மணி வரையிலான 24 மணித்தியாலங்களுக்கு இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35,000 ரூபா கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி தொழிற்சங்கங்கள் இந்த நடவடிக்கையை முன்னெடுத்து வருவதுடன், அத்தியாவசிய நடவடிக்கைகளை மாத்திரம் முன்னெடுக்க சுகாதார சங்கங்களும் தீர்மானித்துள்ளன.
No comments