Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

புத்தாண்டில் அதிகரித்த எரிபொருட்களின் விலை


இலங்கை கனிய வள கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் சில்லறை விற்பனை விலைகளில் இன்று அதிகாலை 5 மணி முதல் அமுலாகும் வகையில், திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை, 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அதன் புதிய விலை 366 ரூபாவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை, 38 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 464 ரூபாவாகும்.

இதேவேளை, ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை, 29 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 358 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 41 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 475 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை, 11 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 236 ரூபாவாகும் என இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

No comments