ஒப்பனைக் கலைஞரும், நடிகையுமான ஆர்.ஜே.வாணியின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவான “யாதுமானவள்” குறும்பட வெளியீடு அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ். ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள ஈழத்திரை (செல்வா திரையரங்கு) திரையரங்கில் இடம்பெற்ற இந்த வெளியீட்டு நிகழ்வில் படக்குழுவினர், ஈழ சினிமா அபிமானிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
பிரபா, M.S.F சஜி, RJவாணி ஆகியோர் பிரதான பாத்திரத்திலும் தர்ஷி, கிரிஷாந்த், ராகுல் துணைப்பாத்திரங்களிலும் நடைத்துள்ளனர்.
ஒளிப்பதிவை சயேசனும், படத்தொகுப்பு பணிகளை S.A. நிலானும், இசையமைப்பு ரொஷானும், கதை, திரைக்கதை, வசனம் எழுதி R.J வாணி இக் குறும்படத்தை இயக்கியுள்ளார்.




.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)


No comments