யாழ்ப்பாணம் புறநகர் பகுதியான கொட்டடி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட டெங்கு ஒழிப்பு விசேட நடவடிக்கையில் 08 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதுடன் , 12 பேருக்கு சிவப்பு எச்சரிக்கை துண்டு வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகமாக காணப்படும் நிலையில் , டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கொட்டடி பகுதியில், யாழ். நகர் பொது சுகாதார பரிசோதகர் தலைமையில் கிராம சேவை உத்தியோகஸ்தர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் இணைந்து சுமார் 80 வீடுகளில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அவற்றில் டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவான சூழல் காணப்பட்ட 08 பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை 12 பேருக்கு சிவப்பு எச்சரிக்கை துண்டு வழங்கப்பட்டுள்ளது.
No comments