யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இரண்டு முச்சக்கர வண்டிகள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு வன்முறை கும்பல் ஒன்றினால் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளது.
இரண்டு வன்முறை கும்பல்களுக்கு இடையில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் முரண்பாடு காரணமாகவே நேற்றைய தினம் முச்சக்கர வண்டிகள் தீக்கிரையாக்கப்பட்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இதேவேளை கடந்த வியாழக்கிழமை இரவு கோண்டாவில் ஐயப்பன் ஆலயத்திற்கு அருகில் இளைஞன் ஒருவர் மீது வன்முறை கும்பல் வாள் தாக்குதலை மேற்கொண்டு , வீதியில் நின்ற முச்சக்கர வண்டியையும் அடித்து உடைத்து சேதமாக்கி விட்டு தப்பி சென்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்திற்கு கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதி விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணத்தில் தங்கி இருந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகின்றார்.
இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் வன்முறை சம்பவங்கள் மீள தலை தூக்க ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments