Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

சர்வதேச ரீதியில் சாதித்து வரும் யாழை சேர்ந்த 08 வயது சிறுவன்


2024 ஆம் ஆண்டில் உலகளாவிய சதுரங்க மேடைகளில் நடைபெறவுள்ள போட்டிகளில் கலந்து கொள்ளும் வாப்புக்களை தன்வசமாக்கி சாதித்துக் காட்டியுள்ளார் யாழ்ப்பாணத்தின் இளம் சதுரங்க வீரர் வேணுகானன் நயனகேஷன்.

 இவ்வருடத்தில் நடக்கவுள்ள மலேசியாவில் நடைபெறவுள்ள  Commonwealth Chess Championship, ஐரோப்பியாவின் அல்பானியா நாட்டில் நடைபெறவுள்ள  World Cadet Championship, தென் அமெரிக்காவின் பிரேசில் நாட்டில் நடைபெறவுள்ள  World Youth Chess Championships, கசகஸ்தான் நாட்டில் நடைபெறவுள்ள Asian Youth Chess Championship, மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள  Western Asia Youth Chess Championship, போன்ற போட்டிகளில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளார்.

அண்மையில் கொழும்பு தர்மபால வித்தியாலயத்தில் நடைபெற்ற Sri Lanka National Youth Chess Championship 2023/24 - Finals (U08 Open) போட்டியில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தெரிவான 450 வீரர்களுடன் விளையாடி , சிறந்த முதல் பத்து வீரருக்குள் தெரிவாகி, தேசிய தெரிவின் இறுதிக்கட்ட போட்டியான  Sri Lanka National Youth Chess Championships 2024 - Super League Events இற்கு தகுதிபெற்றார்.

இப்போட்டியானது கொழும்பு  New Sports Ministry Pavilion ரொரிங்டனில் நடைபெற்றது. இது முதல் பத்து வீரர்களும் ஒருவருக்கு ஒருவர் நேரடியாக விளையாடி  (Round Robin) சவால் நிறைந்த போட்டியாக இருந்த போதும், இதில்  8/9 புள்ளிகளைப்பெற்று 08 வயது திறந்த பிரிவின் தேசிய சாம்பியன் பட்டத்தை வென்று சர்வதேச போட்டிகளில் பங்குபற்றும் அதி உன்னத வாய்ப்புக்களை பெற்றுக்கொண்டார்.  

அது மட்டுமன்றி இலங்கையில் 08 வயதுப்பிரிவில் அதிகூடிய சர்வதேச தரவரிசைப் புள்ளிகளை  (Standard Rating 1116) வைத்திருக்கும் பெருமையையும் நயனகேஷன் தனதாக்கியுள்ளார்.

இவர் கடந்த ஆண்டில் பாடசாலைகள் சதுரங்க சம்மேளனத்தின் தேசிய போட்டியில் 07 வயது திறந்த பிரிவில் சாம்பியன் வென்றதன் ஊடாக கிறீஸ் நாட்டில் நடைபெற்ற போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். அத்துடன் உஸ்பெஸ்கிஸ்தான் நாட்டில் இடம்பெற்ற ஆசிய பாடசாலைகள் சதுரங்கப் போட்டியில் பங்குபற்றி 6 ஆம் இடத்தினை பெற்றுக்கொண்டார்.

கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையில் கல்வி பயின்றுவரும் இந்த 8 வயது இளம் சதுரங்க வீரர் வேணுகானன் நயனகேஷன் தனது 4 வயதிலிருந்து சதுரங்கத்தை விரும்பி கற்றுகொள்ள ஆரம்பித்து கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கையில் இடம்பெற்ற அனைத்து விதமான சதுரங்கப் போட்டிகளிலும் இவரது வயதுப் பிரிவில் 90 வீதமான சாம்பியன் பட்டங்கைளை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments