முல்லைத்தீவு – புதுக்குடியிருப்புப் பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யுத்த காலத்தில் தங்கம் மற்றும் சொத்துக்கள் புதைக்கப்பட்டதாக சந்தேகப்படும் இடமொன்றில் 3 அடி நீளமும் 06 அடி ஆழமும் கொண்ட குழியொன்றைத் தோண்டிக்கொண்டிருந்த போதே குறித்த 6 பேரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கைதுசெய்யப்பட்டவர்கள் நெடுங்கேணி,மதவாச்சி,பதவியா,தெய்நதர, ஹக்மான ஆகிய பகுதிகளைச் சேர்தவர்கள் எனவும், அவர்களை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments