Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

அமெரிக்க தூதுவர் – வர்த்தக அமைச்சர் சந்திப்பு


அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

வர்த்தக அமைச்சில் நேற்றைய தினம் திங்கட்கிழமை குறித்த சந்திப்பு இடம்பெற்றது.

அதன் போது, அதிகரித்து வரும் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கும் பணவீக்கத்தைக் குறைப்பதற்கும் இலங்கை தனது சந்தையை விரிவுபடுத்த வேண்டுமென அமெரிக்கத் தூதுவர் தெரிவித்தார். 

இதற்குப் பதிலளித்த வர்த்தக அமைச்சர், உற்பத்திச் செலவைக் குறைத்தல், அறுவடைக்குப் பின்னரான சேதங்களைத் தடுப்பது, உற்பத்திப் பொருட்களின் தரத்தை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் உணவுப் பாதுகாப்பை அதிகரிப்பது போன்றவற்றில் வர்த்தக அமைச்சு தற்போது கவனம் செலுத்தியுள்ளது என்றார் 

No comments