போதைப் பொருளுக்கு எதிரான போராட்டம் ஒன்று நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
"போதைப் பொருள் பெருந்தீமையிலிருந்து எம்மையும், எமது சந்ததியினரையும் பாதுகாப்போம்" எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக யாழ் மாவட்ட சர்வமத பேரவையின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இடம்பெற்றது.
போராட்டத்தில் யாழ் மாவட்ட சர்வமத பேரவை தலைவர் சிவஸ்ரீ கிருபானந்த குருக்கள், செயலாளர் அருட்பணி இ.ராஜ்குமார், யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர், மௌலவி வி.ஏ.எஸ்.சுபியான் உள்ளிட்ட சில மத தலைவர்கள் கலந்துகொண்டனர்.
No comments