கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் ஐந்து பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் 76ஆவது சுதந்திரதினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் வீதித்தடைகளை தாண்ட பல்கலைக்கழக மாணவர்கள் முற்பட்ட நிலையில் குழப்பமான நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து பொலிஸாரால் போராட்டகாரர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம், கண்ணீர் புகைப் பிரயோகம் நடத்தப்பட்டது.
இதனையடுத்து பல்கலைக்கழக மாணவர்கள் சிலரை பொலிஸார் தூக்கிச் சென்று வாகனங்களில் ஏற்றினர்.
குறித்த மாணவர்களை விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து போராட்டகாரர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
No comments