மன்னார் சாவற்கட்டு பகுதியில் மோட்டர்சைக்கிள் தலைக்கவசத்திற்குள் மிகவும் சூட்சுமமான முறையில் ஐஸ் போதைப்பொருளை மறைத்து விற்பனைக்காக கொண்டு சென்ற 31 வயது நபர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
விடத்தல் தீவு பகுதியில் தலைகவசத்தின் உட்பகுதியில் சூட்சுமமான முறையில் 20 கிராம் 850 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளை மறைத்து வைத்து மோட்டார் சைக்களில் வருகை தந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரைக் கைது செய்துள்ள மன்னார் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர், சந்தேக நபர், கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
No comments