சற்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் இசை ஆராதனை நிகழ்வு யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இந்திய துணைத் தூதரகம் ஏற்பாடு செய்த இந்த இசை ஆராதனை நிகழ்வில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இசை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணத்தின் புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து இந்த இசை ஆராதனையை வழங்கியிருந்தனர்.
இதேவேளை தெரிவு செய்யப்பட்ட பொதுமக்களுக்கு உயர்ஸ்தானிகர் உதவிப் பொருட்களையும் வழங்கினார்.
No comments