யாழ்ப்பாணத்தில் பழுந்தடைந்த உணவுகளை விற்பனை செய்த உணவங்களுக்கு ஒரு இலட்சத்து 37ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
நாவாந்துறை பகுதியில் இயங்கி வந்த உணவகம் ஒன்றில் சுகாதார பரிசோதகர் மேற்கொண்ட திடீர் பரிசோதனையில் பழுதடைந்த உணவை விற்பனைக்கு வைத்திருந்த குற்றச்சாட்டில் உணவக உரிமையாளருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு விசாரணையில் உரிமையாளர் குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து, கடுமையான எச்சரிக்கை விடுத்த மன்று , 72 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது.
அதேவேளை புத்தூர் பகுதியில் உள்ள உணவகத்தில் சுகாதார பரிசோதகர் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் உணவகத்தில் பழுதடைந்த உணவை விற்பனைக்கு வைத்திருந்த குற்றச்சாட்டில் , உரிமையாளருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது
வழக்கு விசாரணையில் , உரிமையாளர் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து , கடுமையாக எச்சரித்த மன்று , 65 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது.
No comments