Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழ்.பேருந்து விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் - பேருந்தின் வழித்தட அனுமதி இரத்து.


சாரதியின் அவசரத்தால் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து , குறித்த பேருந்தின் வழித்தட அனுமதி வடமாகாண போக்குவரத்து அதிகார சபையினால் இரத்து செய்யப்பட்டள்ளது. 

யாழ்ப்பாணம் - அனலைதீவு பகுதியில் கடந்த திங்கட்கிழமை பேருந்தினால் பெண்ணொருவர் இறங்க முற்பட்ட வேளை , சாரதி அவசரமாக பேருந்தினை நகர்த்திமையால் , அப்பெண் விழுந்து படுகாயமடைந்தார். 

அப்பெண்ணை மீட்டு,  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார். 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஊர்காவற்துறை பொலிஸார் சாரதியை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து , நீதிமன்ற உத்தரவில் சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டார். 

இந்நிலையில் குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் வடமாகாண போக்குவரத்து அதிகார சபையினர் விசாரணைகளை முன்னெடுத்து, பேருந்தின் வழித்தட அனுமதியினை இரத்து செய்துள்ளனர். 

பேருந்துகள் போட்டி போட்டு ஓடுவதனாலையே அதிகளவான விபத்துகள் இடம்பெற்று வருவதாகவும் , அவ்வாறு அதிகவேகமாக பேருந்துகளை செலுத்தும் சாரதிகள் தொடர்பில், யாழ்.மாவட்ட செயலக வளாகத்தில் உள்ள  வடமாகாண போக்குவரத்து அதிகார சபையினருக்கு முறையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments