மிரிஹான ஜூபிலி மாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த தம்பதியரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் வீட்டிற்கு சென்று சோதனை செய்தபோது, வீட்டின் அறையில் கட்டிலில் ஆண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதேநேரம் , வீட்டின் சமையலறை தரையில் நிர்வாணமாக பெண்ணின் சடலம் ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது.
சில நாட்களாக அந்த வளாகத்தில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக அயலவர் ஒருவர் மிரிஹான பொலிஸாருக்கு வழங்கிய அறிவித்தலின் பிரகாரம் குறித்த வீடு சோதனையிடப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் அந்த வீட்டில் வசித்த திருமணமான தம்பதிகள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
No comments