Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

இலங்கை வந்துள்ள தாய்லாந்து பிரதமர்


இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் இலங்கைக்கு இன்றைய தினம் சனிக்கிழமை வருகை தந்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில்  இலங்கைக்கு வருகை தந்துள்ள தாய்லாந்து பிரதமர், 76வது சுதந்திர விழாவில் கௌரவ அதிதியாகவும் பங்கேற்கவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, தாய்லாந்து பிரதமர் ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதுடன், வரலாற்று சிறப்புமிக்க இலங்கை - தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதையும் பார்வையிட உள்ளார். 

மேலும் இலங்கையின் இரத்தினம் மற்றும் ஆபரண ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் தாய்லாந்தின் இரத்தினம் மற்றும்  ஆபரண நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கும் இரு தரப்பினரும் எதிர்பார்த்துள்ளனர்.

No comments