யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் நீதிமன்ற உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டில் நகைகளை திருடி சென்ற சம்பவத்தில் தேடப்பட்டு வந்த இருவர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
39 மற்றும் 27 வயதான இருவர் கைது செய்யப்பட்டதுடன் நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பாகவே கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments